×

நெதர்லாந்து, பெல்ஜியம் அடுத்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை செய்ய அனுமதி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஒருவர், எந்த ஒரு மருத்துவ நடவடிக்கைகள்(சிகிச்சைகள்) வாயிலாகவும் சரிசெய்யப்பட  முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் மிகுவும் துன்பப்படுகிறார் என்றால், வேறு எந்த நடவடிக்கை வாயிலாகவும் அவரை விடுவிக்க இயலாத வேளையில் அவரை அத்துன்பத்திலிருந்து விடுவிக்க, அவரைக்  மருந்துமூலம் இறந்துவிடுமாறு கொலை செய்யும் நடைமுறை தான் கருணைக் கொலை. இதற்கு பாரளாவிய ஆதரவும் உண்டு; எதிர்ப்பும் உண்டு. விலங்குகளை இவ்வாறு கொலை செய்வது பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017-ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம்  செய்யப்பட்டன. இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் தன்னை கருணைக் கொலை செய்யும்படி டாக்டர்களிடம் கேட்க முடியும். இதற்கான அனுமதியை  பெறுவதற்கு, வசிப்பிட ஆவணங்கள், பல மருத்துவர்களின் மதிப்பீட்டு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் 12 பேருக்கு கருணைக் கொலைக்கான அனுமதி  வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 150 பேர் வரை இந்த சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறினார்.

உலகின் முதல் நாடாக நெதர்லாந்தில் 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணைக் கொலை சட்டபூர்வமாக்கப்பட்டது. அதை ஆண்டு பெல்ஜியத்தில் கருணைக் கொலை சட்டபூர்வமாக்கப்பட்டது. அமெரிக்காவில் மருத்துவர்களின் உதவியால்  கருணைக் கொலை செய்யப்படுவது சட்டபூர்வமானது.  இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கருணைக் கொலை சட்ட விரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Victoria ,Australia ,Netherlands ,Belgium , Netherlands, Belgium, USA, Australia, Victoria, mercy killing
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...