×

அணு ஆயுதங்களை தயாரிக்கப் போவதாக ஈரான் மிரட்டல்: மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா கூடுதல் படைகள் குவிப்பு

வாஷிங்டன் : அணுசக்தி ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளை மீற போவதாக பகீரங்கமாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கூடுதல் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா பல்வேறு வகைகளில் ஈரானுக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீற போவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா, ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு ஆசியாவில் கூடுதல் படைகளை அமெரிக்கா இறக்கி வருகிறது.

ஈரான் மீது பொருளாதார தடைகள் தொடர்வதால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் 10 நாட்களுக்குள் தொடங்கும் என்று ஈரான் பகீரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதங்களை ஈரான் தயாரிக்கும் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது அமெரிக்காவின் மற்றொரு குற்றச் சாட்டாகும். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் எந்த நேரத்திலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.


Tags : Iran ,forces ,US ,Middle East Asia , Nuclear Power, US, Extra, Forces, Focus, Middle East Asia, Nuclear Weapons, Iran
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...