காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நீடிக்க வேண்டும்: தங்கபாலு பேட்டி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நீடிக்க வேண்டும் என்று தங்கபாலு கூறினார்.   தமிழக காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் 112வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, தமிழக மேலிட பொறுப்பாளர் வெல்ல பிரசாத், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், கக்கனின் மகன்கள் பாக்கியநாதன், சத்யநாதன் மற்றும் அவரது பேத்தி இமையா கக்கன், எஸ்.கே.நவாஸ், தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு காரணமானவர் தலைவர் கக்கன். காங்கிரஸ் கட்சியில் இந்தியா முழுவதும் கக்கனுக்கென்று தனி இடம் உண்டு.
ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவராக இருப்பார். அவர் தலைவராக நீடிக்க வேண்டும் என்பதே இந்தியா முழுக்க உள்ள தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rahul Gandhi ,president ,Congress ,interview ,Gopalakti , Congress leader, Rahul Gandhi, Thangalpalu
× RELATED திரிணாமுல் பாணியில் காங்கிரஸ்: CAA-க்கு...