மத்திய அரசு மீண்டும் கைவிரிப்பு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரவே வராது: மாநிலங்களுக்கு வருமானம் வேண்டுமாம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கடும் வரிகள் போய், ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும் என்று கூறி வந்த பாஜ அரசு இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.  கடந்த 2 ஆண்டுக்கு முன் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. பல பொருட்களுக்கு மாநில, மத்திய வரிகள் இருந்தது போய், ஜிஎஸ்டி என்ற ஒரே வரி முறை வந்தது.  இதனால் பல பொருட்கள் விலை ஏற்றம் கண்டது. எனினும்  அடுத்தடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய பி்ன், ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. நான்கு அடுக்காக வரிகள் விதிக்கப்படுகின்றன.   பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், மது ஆகியவற்றின் மீது மட்டும் ஜிஎஸ்டி வரி இல்லை. பழைய எக்சைஸ் உட்பட வரிகள் உள்ளன. மாநில அரசுகள் இந்த வரிகளை போட்டு வருகின்றன. மாநில அரசுகளின் வருவாய்க்கு காரணமாக இந்த வரிகள் இருப்பதால் இவற்றில் நுழைய மத்திய அரசு விரும்பாமல் இருந்தது.   எனினும், பெட்ேரால், டீசல் உட்பட பெட்ரோலிய பொருட்கள், மது, ரியல் எஸ்டேட் போன்றவற்றின் மீது ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவது குறித்து பரிசீலீக்கப்படும் என்று தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி வந்தார்

Advertising
Advertising

  புதிய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் இது தொடர்பாக மறுபரிசலனை செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை.   ஆனால், பெட்ரோலிய பொருட்கள் உட்பட மூன்று வகைகளின் மீது ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவது குறித்து அரசு பேசாது என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே, பெட்ரோலிய கம்பெனிகளும், விமான நிறுவனங்களும் இது தொடர்பாக வலியுறுத்தி வந்தன. விமான எரிபொருள் மீதான ஜிஎஸ்டி அமல்படுத்தினால் கட்டணம் குறையும், போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று விமான நிறுவனங்கள் கூறின.

இதுபோல, பெட்ரோலிய நிறுவனங்களும் மத்திய அரசை வலிறுத்தி வந்தன.   இதுதொடர்பாக  மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில்  கூறியதாவது: பெட்ரோல், டீசல், மது மற்றும் ரியல்  எஸ்டேட் மீது ஜிஎஸ்டி வரி போடாமல் இருப்பதற்கு மாநில அரசுகள் தான் காரணம். மாநில அரசுகளுக்கு வரி வருமானமே இந்த மூன்றின் மூலம் தான் வருகிறது. இதில் கைவைக்க வேண்டாம் என்று பல மாநில அரசுகளும் ஒருமனதாக கூறி விட்டன. அதனால் இப்போது அந்த நிலையில் தான் மாநில அரசுகள் உள்ளன. இதனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிடுவதை விரும்பவில்லை.

 மேலும், ஜிஎஸ்டி வரி அமல் செய்தால், பெட்ரோல் டீசல் வரியில் எந்த மாற்றமும் ஏற்படாது. காரணம், எண்ணெய் கம்பெனிகளுக்கு  தான் போய் சேரும். வாடிக்கையாளர்களுக்கு குறைவாக தான்  போய் சேரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.   இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: