ஜே.பி.நட்டா தேர்வு பாஜ வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும்: தமிழிசை மகிழ்ச்சி

சென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜே.பி. நட்டா பாஜவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் அவரது நீண்ட அனுபவமும், ஈடுபாடும் சென்ற முறை ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் இமாச்சல பிரதேச மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜவின் வளர்ச்சிக்கும் மிகுந்த உறுதுணையாக இருக்கும்.

Advertising
Advertising

அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலும் கட்சியை மேலும் மேலும் பலப்படுத்த உறுதுணையாக இருக்கும். தமிழக பாஜ கட்சி சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வரவேற்பும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: