×

நீருக்கடியில் வித்தை காட்டிய மேஜிக் நிபுணர் மரணம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றில் நீருக்கடியில் மூழ்கி வித்தை காட்டிய மேஜிக் நிபுணர் மாயமானார். நீண்ட நேரமான பின்னரும் கரை திரும்பாததால், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.மேற்குவங்க மாநிலத்தின் வடக்கே உள்ள சோனாப்பூரைச் சேர்ந்தவர் மேஜிக் நிபுணர் சஞ்சால் லாகிரி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தின் 28வது தூண் அருகே ஹூக்ளி ஆற்றில் நீருக்கடியில் மூழ்கி,  காணாமல்போகும் வித்தை காட்டுவதாகக் கூறி மக்களின் கவனத்தை பெற்றார். இதனைக் காண படகு, ஆற்றங்கரை, ஹவுரா பாலத்தில் பார்வையாளர்கள் கூட்டம் கூடியது.

இந்நிலையில், மதியம் 12.35 மணியளவில், 6 பூட்டுகள் கொண்ட 6 அடி உயர கூண்டுக்குள் கண், வாய் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடைக்கப்பட்ட அவர் கிரேன் மூலம் நீருக்கடியில் அனுப்பப்பட்டார். அவர் கை, கால்கள்  கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் அதிலிருந்து தப்பி மீண்டும் நீருக்கு மேல் வருவதுதான் வித்தை. ஆனால், 10 நிமிடம் ஆன பின்னரும் அவர் மேலே வரவில்லை. இதனால் பார்வையாளர்கள் அச்சத்தில் உறைந்தனர்.தகவல்அறிந்து வந்த மீட்புக்  குழுவினர் சஞ்சால் லாகிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மேஜிக் நிபுணரை கண்டுபிடிக்க முயன்றோம். ஆனால் சுழி அவரை இழுத்து சென்றிருக்க வேண்டும். நீரில் மூழ்கி தேடும் குழுவினராலும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணி  தொடர்கிறது’’ என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை சஞ்சால் மீட்கப்படாததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.





Tags : magic expert , Showing underwater, gimmick, Magic Expert
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்