×

செல்லாது... செல்லாது... யோகிய டிஸ்மிஸ் செய்ங்க...: கலெக்டர் அலுவலகத்தில் காவலர் அலம்பல்

எடாவா:  உத்தரப் பிரதேசத்தில் மாநில ஆயுதப் படையை சேர்ந்த காவலர் போலீஸ் சீருடையுடன் சமாஜ்வாதி தொப்பி அணிந்து கொண்டு பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மாநில ஆயுத படைப்பிரிவில் காவலராக இருப்பவர் முனீஷ் யாதவ். இவர் நொய்டாவில் பணியில் இருக்கிறார். தற்போது விடுமுறையில் தனது சொந்த மாவட்டமான எடாவாவிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர்  கடந்த வெள்ளியன்று கலெக்டர் அலுவலகத்துக்கு போலீஸ் சீருடையுடன் சென்றுள்ளார். அப்போது சமாஜ்வாதி தொப்பியை அவர் அணிந்திருந்ததோடு, ‘‘யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’’ என்ற வாசகம் எழுதப்பட்ட  பலகையையும் எடுத்து சென்றுள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முனீஷ் யாதவ், ‘‘உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில்  மாநில ஆளுநர் பாஜ தலைமையிலான அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். எனக்கு எனது வேலையைகாட்டிலும் நாடுதான் மிகவும் முக்கியம் என்றார். இதனிடையே போலீஸ் சீருடையுடன் வந்து முனீஷ் இவ்வாறு நடந்துகொள்வதை அறிந்த போலீசார் அவரை பிடிப்பதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், சிலரது தூண்டுதலின்பேரில் எனது கணவர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும்படி கூறியுள்ளார் என்றார். சம்பவம் குறித்து ஏஎஸ்பி ராம் யாஷ் சிங் கூறுகையில், அரசு ஊழியரின் ஒழுக்கமற்ற இந்த நடவடிக்கை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




Tags : Collector ,office , Yogi Dismiss , Collector's Office
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...