பாக். உளவுப்பிரிவு தலைவராக பியாஸ் நியமனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு பிரிவான ஐஎஸ்ஐ தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து தலைமையிடத்து துணை ஜெனரலாக அவர் நியமிக்கப்பட்டார்.  இவர் ஏற்கனவே ஐஎஸ்ஐயின்  உள்நாட்டு பாதுகாப்பு தலைவராக பணிபுரிந்துள்ளார். மேலும் ராணுவ தலைமை ஜெனரல் குமார் பஜ்வாவிற்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில், ஐஎஸ்ஐ தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர்  திடீரென  மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல்  பியாஷ் ஹமீது ஐஎஸ்ஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபரில் ஐஎஸ்ஐ தலைவராக பதவியேற்ற நவீத் முக்தர்  ஓய்வு பெற்றதையடுத்து தலைவராக ஆசிம்  முனீர் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories: