குப்பை மேட்டில் தீவிபத்து

ஆலந்தூர்: ஆலந்தூர், எம்கேஎன் சாலை மேம்பாலத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான காலி மைதானத்தில் குப்பை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை மேட்டில் நேற்று காலை தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் தீ பரவி மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால், கிண்டியிலிருந்து ஆலந்தூர் வரக்கூடிய மேம்பால பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து கிண்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories: