இரண்டு போட்டியில் ஜேசன் ராய் விளையாட மாட்டார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தின்போது காயம் அடைந்த இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஜேசன் ராய், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் நடக்க உள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனையில் தசைநார் கிழிந்துள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் குறைந்தது ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று போட்டியில் 54, 8, 153 ரன் விளாசி நல்ல பார்மில் இருந்த ராய் காயம் அடைந்துள்ளதும், கேப்டன் இயான் மோர்கன் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதும் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.Tags : Jason Rai ,matches , Jason Roy,will not,play , two match
× RELATED டூவீலர் விபத்தில் 2 பேர் படுகாயம்