சில்லி பாயின்ட்...

*பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கு இந்திய அணி வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், ராஜ்யவர்தன் ரத்தோர், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், முகமது கைப், வீரேந்திர சேவக், ஷாகிப் அப்ரிடி உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தகவல் பதிந்து வருகின்றனர்.
* மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்தபோது, பாகிஸ்தான் அணி டி/எல் விதிப்படி 5 ஓவரில் 136 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதற்கு கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி ரன் ரேட்டை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆட்டத்தை தொடர்ந்து நடத்தியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
* கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில், உருகுவே அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஈக்வடார் அணியை எளிதாக வீழ்த்தியது.
* ‘உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக உணர்ச்சிவசப்படாமல் ஒருங்கிணைந்து விளையாடியதாலேயே வெற்றியை வசப்படுத்த முடிந்தது. எங்களுக்கு ஆதரவாகத் திரண்ட ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

Tags : Li Pai Yin T ...
× RELATED சில்லி பாயின்ட்...