2-3 போட்டிகளுக்கு புவனேஷ்வர் இல்லை!

பாகிஸ்தான் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தின்போது, இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேற நேரிட்டது. அவர் தனது 3வது ஓவரில் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களத்துக்கு திரும்பவில்லை. ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் தான் அந்த ஓவரை நிறைவு செய்தார். அதிலும் முதல் பந்திலேயே இமாம் உல் ஹக் விகெட்டை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்படும் புவனேஷ்வர் அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே தொடக்க வீரர் ஷிகர் தவான் கை விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் ஓய்வெடுத்து வரும் நிலையில், புவனேஷ்வரும் விளையாட முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. அடுத்த 3 லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் (ஜூன் 22), வெ.இண்டீஸ் (ஜூன் 27), இங்கிலாந்து (ஜூன் 30) அணிகளை இந்தியா சந்திக்க உள்ளது.Tags : Bhuvaneshwar ,matches , There, no, Bhubaneswar , 2-3 matches!
× RELATED முதல் முறையாக இரவில் அக்னி 3 சோதனை