அருப்புக்கோட்டையில் குடிநீர் கோரி திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

அருப்புக்கோட்டை: குடிநீர் வழங்கக் கோரி, அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி திருநகர் பகுதியில் உள்ள 23, 26, 27, 28 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த வார்டுகளில் கடந்த ஒன்றரை மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்ைல. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில், அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த டிஎஸ்பி வெங்கடேசன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் காளீஸ்வரி மற்றும் டிராப்ட்ஸ்மேன் சுமதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் ேபச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

× RELATED ஈரோடு அருகே இலவச மடிக்கணினி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கைது