பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்,..தலைவராக அமித்ஷா தொடர்வார் என அறிவிப்பு

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் ஆட்சி மன்றக்குழு கட்சியின் செயல்தலைவரை தேர்வு செய்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.  

தலைவராக அமித்ஷா தொடர்வார்:

செயல் தலைவர் இருந்தாலும் தலைவராக அமித்ஷாவே தொடருவார் என்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் வரை தேசிய தலைவராக அமித்ஷா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா தலைமையின் கீழ பல்வேறு தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Related Stories: