காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 3 வீரர்கள் காயம்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பாதுகாப்பு படையினர் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

தீவிரவாதிகளை ஒடுக்க தனிப்படைகள்

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரா, காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. ஆதலால் இங்கு அடிக்கடி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து அம்மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனிப்படை குழு அமைத்துள்ளது.

 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொலை

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் Achabal என்ற பகுதியின் Bidoora கிராமத்தில்  தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், ஜம்மு-காஷ்மீர் போலிஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் சுற்றி வளைத்தனர். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளை தப்ப விடாமல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவர்களின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த இயக்கத்தை  சேர்ந்தவர்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே 3 அல்லது 4 தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.

Related Stories: