கால் அங்குலத்தில் தங்க உலக கோப்பை : விராட்கோலிக்கு வழங்க கர்நாடக ஆசாரி விருப்பம்

ஹாசன்: கர்நாடகாவைச் சேர்ந்த நகை ஆசாரி ஒருவர்  தங்கத்தால் கால் அங்குல உயர உலகக் கோப்பை செய்து அசத்தியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் டவுன் பகுதில் உள்ள ஓசலேன் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர் தங்க நகைகள் செய்யும் ஆசாரி வேலை செய்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டிகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்களும் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டும் என எண்ணிய நரேந்திரன் 200 மில்லி கிராம்  தங்கத்தில் கால் அங்குல உயர உலக கோப்பையை செய்து அசத்தியுள்ளார். இது பார்ப்பதற்கும் மிக அழகாக உள்ளது. இதனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கொடுக்க நரேந்திரன் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் நரேந்திரன் கூறுகையில், ‘‘எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். தற்போது நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும். இதற்காக தற்போது நான் சிறிய  உலகக் கோப்பை செய்துள்ளேன். இதனை கிரிக்கெட் தொடரை முடித்து இந்திய வீரர்கள் திரும்பும் போது விராட் கோலியை சந்தித்து அவரிடம் கொடுக்க உள்ளேன்’’ என்றார்.

Related Stories: