×

திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பெண் ஏட்டு எரித்து கொலை: விசாரணையில் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: திருமணம் செய்ய மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் போலீஸ்காரர், பெண் ேபாலீசை எரித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.கேரளாவின் காஞ்சிப்புழா பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா புஷ்பாகரன்(34). வள்ளிகுந்நம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கணவர் சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சவுமியாவை ஆலுவா போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வரும் அஜாஸ்(33) என்பவர் கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து ெகாலை செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த 2 டிஎஸ்பி  தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு முன் போலீசில் சேர்ந்த சவுமியா  திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சி எடுத்துள்ளார். அப்போது அங்கு பயிற்சியாளராக இருந்த அஜாஸ், சவுமியாவிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. பயிற்சியாளர் என்பதால்  சவுமியாவும் சகஜமாக பழகியுள்ளார்.

இதன் பிறகு திருமணம் செய்ய விரும்புவதாக அஜாஸ் கூறவே, சவுமியா பழகியதை குறைத்தார். இருப்பினும் அடிக்கடி போனில் தொடர்புக் கொண்டு திருமணம் செய்ய அஜாஸ் வற்புறுத்தியுள்ளார். தனக்கு திருமணமாகி 3 குழந்தைகள்  உள்ளது என்று தெரிவித்தும் அஜாஸ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் சவுமியா இருச்சக்கர வாகனத்தில் வேலைக்கு புறபட்டார். சவுமியாவின் வீட்டருக்கே காரில் காத்திருந்த அஜாஸ், அவரது ஸ்கூட்டரில் காரால் மோதினார். கீழே விழுந்த சவுமியா அஜாஸை பார்த்ததும் தப்பி  ஓட முயன்றார். ஆனால் அஜாஸ் கத்தியால் சவுமியாவை சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த சவுமியா உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சவுமியா சம்பவ இடத்திலேயே கருகி இறந்தார். அஜாசுக்கு  திருமணமாகவில்ைல. கொச்சி ஆயுதப்படை முகாமில் இருந்து கடந்த வருடம் தான் ஆலுவா போக்குவரத்து போலீசில் பணி மாற்றலாகி உள்ளார்.

மாஜிஸ்திரேட் விசாரணை
சவுமியாவை பெட்ரோல் விட்டு கொளுத்தியபோது அஜாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது 50 சதவீத காயத்துடன் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆலப்புழா மாஜிஸ்திரேட் ேநற்று  மருத்துவமனைக்கு ெசன்று அஜாசிடம் வாக்குமூலம் பெற முயற்சித்தார். ஆனால் அவரால் பேச முடியாததால் மாஜிஸ்திரேட் திரும்பி சென்றார்.3வது கொடூர சம்பவம்சவுமியா கொலையையும் சேர்த்து கேரளாவில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 13ம் தேதி திருவல்லாவிலும், ஏப்ரல் 4ம் தேதி திருச்சூரில் 2 கல்லூரி மாணவிகளும் இதேபோல் கத்தியால் குத்தி  எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 3 சம்பவங்களும் திருமணத்திற்கு அவர்கள் மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்ததாகும்.

வீட்டில் புகுந்து கொல்ல முயற்சி
சம்பவம் குறித்து சவுமியாவின் தாய் இந்திரா கூறியதாவது: சவுமியாவுக்கும் அஜாசிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன் அஜாசிடம் இருந்து சவுமியா ₹1.25 லட்சம் கடன் வாங்கினார். பலமுறை  திருப்பி கொடுக்க முயன்றும் அஜாஸ் வாங்க மறுத்தார். சவுமியா அஜாசின் வங்கிக் கணக்கில் பணத்தை போட்டார். ஆனால் பணத்தை அவர் சவுமியா வங்கிக் கணக்கிற்கு பணத்தை திரும்பி அனுப்பினார். நானும் சவுமியாவும் எர்ணாகுளத்தில்  உள்ள அஜாஸ் வீட்டிற்கு சென்று பணத்தை கொடுத்தும் வாங்க மறுத்தார். சவுமியாவை திருமணம் செய்ய விரும்புவதாக அஜாஸ் கூறியபோது, சவுமியா ஏற்க மறுத்தார். பலமுறை போனிலும் நேரிலும் அஜாஸ் மிரட்டினார். ஒருமுறை  வீட்டிற்குகே வந்த சவுமியாவை கொல்ல முயன்றார். தன்னை திருமணம் செய்யாவிட்டால் உன் கணவனை கொன்றுவிடுவேன் என்று அஜாஸ் மிரட்டல் விடுத்தார்.  சவுமியாவை திருமணம் செய்ய முடியாத ஆத்திரத்தால் தான் அவர்  சவுமியாவை கொன்றார் எனக்கூறினார்.





Tags : Woman burned , death , protest ,marriage
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...