கர்நாடக மாஜி அமைச்சர் பேட்டி காவிரி நதிநீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

புதுக்கோட்டை: காவிரி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று கர்நாடக மாஜிஅமைச்சர் ஈஸ்வர பீமண்ண கந்தரே கூறி னார்.புதுக்கோட்டையில் வீரசைவ பேரவையின் தமிழ் மாநில குழு கூட்டம் நடைபெற்றது இதில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஈஸ்வர பீமண்ண கந்த்றே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கும், முதல் அமைச்சருக்கும் இடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. கர்நாடக அரசு சுமூகமாக சென்று கொண்டுள்ளது. காவிரிப் பிரச்னையில் இரு அரசுகளும் அமர்ந்து பேச வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். காவிரி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க முடியும் என்றார்.

Advertising
Advertising

Related Stories: