தென் சென்னை பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளிடம் திமுக மனு

துரைப்பாக்கம்: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம், மயிலாப்பூர் மற்றும் தி.நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், பெருங்குடி, செம்மஞ்சேரி, எழில்முக நகர், ஜவஹர் நகர், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர், மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகர் ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும்  பாதாள சாக்கடை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் விரைந்து முடித்து  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிஹரனை நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர்.

× RELATED பிரதமரிடம் திமுக மனு