கைகொடுக்குமா பெரியாறு? மழை வேண்டி தேக்கடியில் விவசாயிகள் பிரார்த்தனை

கூடலூர்: தேனி மாவட்டத்திலுள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் பெரியாறு அணை நீரை நம்பி உள்ளன. இந்த நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் முதல்  வாரம் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்தாண்டு அணைக்கு எதிர்பார்த்த நீர்வரத்து இல்லை. தற்போது அணையிலிருந்து தமிழக பகுதி குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்போகத்திற்கு  ஜூன் முதல் வாரம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், மழை வேண்டி சின்னமனூர் விவசாய சங்கம், நஞ்சை பட்டாதாரர் விவசாய சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் (எண் 6) சார்பில் தேக்கடியிலுள்ள துர்க்கை அம்மன் கோயிலில் நேற்று பிரார்த்தனை நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் பகுதியிலும் வருணபகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: