மணல் கடத்தலை தடுத்ததால் லாரி ஏற்றி எஸ்ஐயை கொல்ல முயற்சி

வாலாஜா:  வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு பாலாற்றில் இருந்து மணல் கடத்துவதாக  கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் எஸ்.ஐ பாஸ்கர், ஏட்டு நேதாஜி மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டிருந்த

னர். அப்போது, அவ்வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர்.
Advertising
Advertising

ஆனால், லாரியை நிறுத்தாமல் எஸ்ஐ மற்றும்ஏட்டு மீது மோத முயன்றனர்.நூலிழையில் தப்பிய அவர்கள்  லாரியை துரத்தி சென்று  மடக்கினர். விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் வாலாஜா அடுத்த தகரக்குப்பம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் விக்கி என்கிற விக்னேஷ்(23) மற்றும் திவாகர்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்றதாக  அவர்கள் மீது வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: