×

ஆக்கிரமிப்புகள் தான் பிரச்னைக்கு காரணம்: ராமகிருஷ்ணன், அடையாறு குடியிருப்போர் நலச்சங்க துணை தலைவர்

சென்னை குடிநீர் வாரியம் மூலம் எல்லோருக்கும் குடிநீர் வருவதில்லை. பைப்லைன் எல்லாம் போட்டுள்ளனர். ஆனால், பைப்லைனில் தண்ணீர் வருவதில்லை. ஆனால், மெட்ரோ டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் தரப்படுகிறது. பைப்  லைனில் தண்ணீர் தர அவர்களால் முடியவில்லை. ஆனால், டேங்கர் லாரியில் இருந்து எப்படி தண்ணீர் வருகிறது என்பது தெரியவில்லை. இப்போது தண்ணீர் பிரச்னை மிக மோசமாக  உள்ளது. ஆனால், இவ்வளவு நாள், என்ன முடிவெடுத்தனர்?  என்ன செய்ய போகிறார்கள்? என்று கூறவில்லை. அவர்களுக்கு தெரியும் குடிநீர் பிரச்னை வரும் என்று. ஆனால், அவர்கள் இத்தனை  நாளாக அதை சரி செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. இப்போது குடிநீர் பிரச்சனையை ஒவ்வொரு அரசியல் கட்சியினர் எடுக்கின்றனர். அது மிகவும் தவறு. குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்படுவது மக்கள் தான். எதனால் இந்த பிரச்சனை வருகிறது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பது இன்றளவும் தமிழக அரசு விளக்கம் அளிக்கவில்லை. எல்லோரும் குடிநீர் வரியை கட்டி விட்டனர்.  அவர்களுக்கு பணம் வந்து விட்டது. ஆனால், தண்ணீர் தான் தருவதில்ைல. இதற்கு இப்போது யார் பொறுப்பு.  வரி கட்ட சொன்னார்கள்; அனைவரும் கட்டி விட்டனர். ஆனால், இப்போது தண்ணீர் வரவில்லை. அப்படியெனில் பணத்தை திரும்ப  தருவார்களா. தண்ணீரே வரவில்லை என்ற பிறகு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும்?

நாங்கள் தனியார் டேங்கர் லாரி மூலமாகத்தான் தண்ணீர் பெற்று வருகிறோம். எங்களுக்கு மெட்ரோ வாட்டர் வந்தே நீண்ட நாட்கள் ஆகிறது. கடந்த காலங்களில் டேங்கர் லாரியில் 12 ஆயிரம் லிட்டர் ₹1,800க்கு வாங்கி வந்தோம். இப்போது ₹5  ஆயிரம் வரை கேட்கின்றனர். நாங்கள் தனியார் லாரிக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்க குடிநீர் வாரியத்துக்கு ஏன் வரி கட்ட வேண்டும்.தற்போது எங்களது பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. நாங்கள் 100 அடியில் போர்வெல் போட்டு தண்ணீர் பெற்றோம். ஆனால், இப்போது, எங்கள் பகுதியில் பலரும் 200 அடிக்கு மேல் தான் ேபார்வெல் போட்டுள்ளனர். இதனால்,  நாங்கள் போர்வெல் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புது கட்டிடம் எது வந்தாலும் 200 அடிக்கு மேல் தான் போர்வெல் போடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முதலில் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். சென்னை மாநகரை பொறுத்தவரையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்க வேண்டுமோ அங்கெல்லாம் ஆக்கிரமித்து  வீடு கட்டியுள்ளனர். தண்ணீர் நிற்கவில்லை எனில் எப்படி பொதுமக்களுக்கு தண்ணீர் தர முடியும். இதை அரசு கண்டுகொள்ளவில்லையே. மாநகராட்சி என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. ஆக்கிரமிப்புகள் அப்படியே  இருக்கிறது. நாங்கள் புகார் கொடுத்தால் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களால் தான் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திராவை பாருங்கள்; அந்த மாநிலங்களில் நீர்நிலைகளை  பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு பருவமழை பொய்த்த நிலையிலும், குடிநீர் பிரச்சனை ஏற்படவில்லை. நாம் நீர்நிலைகளை தூர்வாரியிருந்தால் இப்போது குடிநீர்  பிரச்னை ஏற்பட்டிருக்காது. ஓரளவு நிலைமையை சமாளித்து இருக்க முடியும். மாநகராட்சி என்னசெய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. ஆக்கிரமிப்புகள் அப்படியே இருக்கிறது. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அவர்களால் தான் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது



Tags : Ramakrishnan , iyar Resi,dent Welfare ,Association
× RELATED உத்தமபாளையம் அருகே திமுக தேர்தல்...