×

அனைத்து ஓட்டல்களும் மூடப்படும் அபாயம்: வெங்கடசுப்பு, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர்

ஓட்டல்களுக்கு தேவையான தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் தான் பெறப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் தட்டுபாடு காரணமாக ஒரு லோடு லாரி தண்ணீர் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. முன்னர், ஒரு லோடு டேங்கர்  லாரி தண்ணீர் ₹1,800க்கு வாங்கி வந்தோம். தற்போது ₹3,600 கொடுத்து வாங்கி வருகிறோம். காசு கொடுத்து தண்ணீர் கேட்டாலும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. இதனால், தண்ணீரை சிக்கனப்படுத்துவது தொடர்பாக நாங்கள் கூறி  வருகிறோம். நிறைய ஓட்டல்களில் சாப்பாட்டை (மீல்ஸ்) நிறுத்தி விட்டனர். பெரிய கடைகளில் சாப்பாடு வைத்தால் ஒரு சாப்பாட்டிற்கு 12 கப்பையும், பிளேட்டையும் கழுவ வேண்டியுள்ளது. பெரும்பாலான கடைகளில் மீல்ஸையே நிறுத்தி  வைக்கப்போவதாக நோட்டீஸ் கொடுத்து விட்டனர். இப்போதே அனைத்து ஓட்டல்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சரி பண்ண சொல்லி இருக்கிறோம். அப்படியாவது கொஞ்சம் நிலத்தடி நீர் கிடைக்கட்டும் என்பதற்காக அதை செய்யச்  சொல்லி இருக்கிறோம்.

ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல் பார்த்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம். விரைவில் எங்கள் சங்கம் சார்பில்  முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம். ஐகோர்ட் தீர்ப்பு காரணமாக கிணறுகளில்  இருந்து தண்ணீர் எடுப்பதில் சிக்கல் உள்ளது. அதை காரணம், காட்டி பல இடங்களில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. தமிழக அரசு லாரிகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும். இப்போது அரசு தான் தண்ணீர் எடுத்து தருவோம்  என்கின்றனர். அரசு தரப்பில் இப்போது குறைவான லாரிகளில் மட்டுமே ெகாண்டு இயக்குவதால் தண்ணீர் அனைவருக்கும் தர முடியாது. எனவே, எங்கே எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கு தண்ணீர் எடுக்க தனியார் லாரிகளை  அனுமதிக்க வேண்டும். சென்னையில் 50 ஆயிரம் ஓட்டல்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஓட்டல்கள் எங்களது சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் தான் ஓட்டல்களுக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது.  மற்ற இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தாலும், ஒரளவு ஓட்டல்களில் சமாளிக்க முடிகிறது. ஆனால், சென்னையில் தான் நிலைமை மோசமாக உள்ளது. இதனால், சென்னையில் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்படும் சூழ்நிலை உள்ளது.  இதே நிலை தொடர்ந்தால் ஓட்டல்கள் மூடப்படுவது நிச்சயம்.

அரசு உடனடியாக நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாலாற்றில் ஆங்காங்கே தடுப்பணை அமைக்க வேண்டும். அப்போது நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும், மழை நீர்  சேகரிப்பு கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பல வீடுகள், கடைகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. உடனடியாக கட்டமைப்பை சரி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிரமாக சோதனை  செய்து, அனைவரும் இந்த மழை நீர் கட்டமைப்பை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சாப்பாட்டிற்கு 12 கப்பையும், பிளேட்டையும் கழுவ வேண்டியுள்ளது. பெரும்பாலான கடைகளில் மீல்ஸையே நிறுத்தி வைக்கப்போவதாக நோட்டீஸ் கொடுத்து விட்டனர்.




Tags : Venkatasupu ,closure ,hotels ,Tamilnadu , Risk , Venkatasupu, president, Tamil Nadu Hotel ,Owners Association
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்