நா வறண்டு தவிக்குது தமிழகம்: தாய்மார்கள் கண்ணீர் கண்ணீர்...

* சென்னை... வறண்ட பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற பீதியும், அச்சமும் மக்களை கொஞ்சம் ெகாஞ்சமாக தொற்றிக் கொண்டிருக்கிறது.

* திருச்சி, தஞ்சையில் தண்ணீர் பிரச்னையின் புதிய உச்சமாக இருவர் ெகாலை செய்யப்பட்டுள்ளனர்.

* பள்ளிகளில் கழிவறைகளை மூடி வைக்கும் மிக மோசமான பரிதாபம் நடக்கிறது.  சில பள்ளிகளில் பாதுகாப்பு இல்லாத தண்ணீர் விநியோகிக்கும் கொடுமையும் நடக்கிறது.

*  ‘கை கழுவ, பாத்திரம் சுத்தம் செய்ய  தண்ணீர் இல்லாததால், மதிய சாப்பாடு வழங்க முடியாத நிலை’ என்று ஓட்டல்களில் அறிவிப்பு பலகையை காண முடிகிறது.

* லாரி தண்ணீர் வாங்கலாம் என்று இதுவரை ஆறுதல் பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு புது அதிர்ச்சி. ஒரு சவரன் தங்கம் விலைக்கு லாரி தண்ணீர் சென்று விட்டது.

* ஒரு  குடம் தண்ணீருக்காக, காடு, மலை, வயல் தோட்டங்கள் என்று  அலையும் தாய்மார்களின் நிலை மிகவும் வேதனையானது. சென்னையை தாண்டினால் இந்த அவல காட்சிகள்தான்.

* 2015ல் வெள்ளத்தை அள்ளிக்கொட்டி, தலைநகரை மூழ்கடித்து மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து சென்ற கோரத்துக்கு ெசாந்தக்காரரான செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலை, ஊற்று தோண்டி குடம் தண்ணீர் எடுக்கும் அவலத்துக்கு  சென்று விட்டது.

* புழல் ஏரி அடியோடு வறண்டு விட்டது; தண்ணீர்  எடுக்க முடியாது  என்று சிறிது கூட கவலைப்படாமல் அதிகாரிகள் சொல்லும் அளவுக்கு, எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கிறது இந்த நீர்த்தேக்கம்.

* எங்கு திரும்பினாலும் சாலை மறியல்கள். பெரும்பாலும், தாய்மார்கள் குடத்துடன் சாலையை மறித்து குமுறும் காட்சிகள், ‘நம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியுமா? அவர்களால் ஆட்சி செய்யும் அரசுக்கு தெரியுமா?’ என்று இந்த மக்கள்  கொதிக்கி–்ன்றனர்.

* ‘உங்களின் லேப்டாப்பை கொண்டு வாருங்கள்’ என்று சொல்லும் பல சாப்ட்வேர் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடம் இப்போது, ‘லஞ்ச் பாக்சுடன் தண்ணீரும் கொண்டு வாருங்கள்’ என்று கூறி வருகின்றன.

ஆனால், உட்கட்சி குழப்பம், குடும்பத்தினருக்கு, ஜாதியினருக்கு பதவி தருவது, ஆட்சியை தக்க வைக்க எம்எல்ஏக்களை பாதுகாப்பது...என்பதில் காட்டும் அதிதீவிர அக்கறையை தண்ணீருக்கு கதறும் தாய்மார்கள் விஷயத்தில் ஒரு பங்காவது  காட்டலாமே அரசு என்று அங்கலாய்க்கின்றனர் சாமான்ய மக்கள். மொத்தத்தில், ‘தண்ணீர்... தண்ணீர்... தாய்மார்கள் கண்ணீர்.. .கண்ணீர்...’ என்ற பரிதாப நிலைக்கு சென்று விட்டது தமிழகம். இதோ நான்கு பேரின் பார்வை.

Related Stories: