அரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் அதிரடி

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009 முதல் பதவி  வகித்து வருகிறார். இவர் மீது நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு  குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, பிரதமருக்கான  அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமையலுக்கு முழு நேர தலைமை சமையல்காரர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி, பல்வேறு உணவு வகைகளை பிரபல சொகுசு ஓட்டல்களில் இருந்து ₹70 லட்சத்துக்கு வாங்கி சாப்பிட்டதாக அவரது மனைவி சாரா நெதன்யாகு  மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

Advertising
Advertising

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்தப்பட்ச தண்டனை அளிக்கும்படி சாரா  கேட்டுக்  கொண்டார். இதையடுத்து, அவரை நேற்று குற்றவாளியாக அறிவித்த ஜெருசலேம் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ₹1.95 லட்சம் அபராதம்  விதித்தார். மேலும், முறைகேடாக செலவு செய்த மக்களின் வரிப் பணமான ₹8.80 லட்சத்தை, 9 தவணைகளாக அரசு கருவூலத்தில் செலுத்தும்படியும்  உத்தரவிட்டார். முன்னதாக, கடந்த 2016ல் வீட்டை சுத்தம் செய்யும் பணியாளை அவமதித்த குற்றத்துக்காக சாராவுக்கு ₹29.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது முன்னாள் ஊழியர் ஒருவர் தன்னை சாரா துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: