சிஎம்டிஏ, டிடிசிபியில் அனுமதி பெற எந்த அதிகாரி எந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்: அரசாணை வெளியீடு

சென்னை: கட்டிட அனுமதி அளிக்கும் போது எந்த அதிகாரி எந்த வகையான கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் எளிதாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக ஒற்றை சாளர முறையில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த கட்டிடங்களை ஆய்வு செய்துவது  தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்ைன பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12 உயரம் மற்றும் 750 சதுர அடிக்கு வரையுள்ள வீடுகள் மற்றும்  12 அடி உயரம் மற்றும் 300 சதுர அடி வரையுள்ள வணிக கட்டிடங்கள் ஆகியவற்றை உதவி பிளானர்  அல்லது உள்ளாட்சி அமைப்பின் உதவி பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். 12 அடி முதல் 18.3 அடி வரை உயரம் உள்ள வீடுகளை உதவி பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். 300 சதுர அடி முதல் 7500 சதுர அடி வரையுள்ள மற்ற வகை  கட்டிடங்கள், 7500 சதுர அடி முதல் 30 ஆயிரம் சதுர அடி வரையுள்ள மற்ற  வகை கட்டிடங்களை துணை பிளானர் ஆய்வு செய்ய வேண்டும். 30 ஆயிரம் சதுர அடி முதல் 1 ெஹக்டேர் வரையுள்ள கட்டிடங்களை தலைமை பிளானர் ஆய்வு  செய்ய வேண்டும்.

இதைப்போன்று நகர் ஊரமைப்பு இயக்கத்தின் கீழ் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 12 உயரம் மற்றும் 750 சதுர அடிக்கு வரையுள்ள வீடுகள் மற்றும் 12 அடி உயரம்  மற்றும் 300 சதுர அடி வரையுள்ள வணிக கட்டிடங்கள் ஆகியவற்றை உதவி இயக்குனர் அல்லது உள்ளாட்சி அமைப்பின் உதவி பொறியாளர் ஆய்வு  செய்ய வேண்டும். 12 அடி முதல் 18.3 அடி வரை உயரம் உள்ள வீடுகளை உதவி இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும். 300 சதுர அடி முதல் 7500 சதுர அடி வரையுள்ள மற்ற வகை கட்டிடங்கள், 7500  சதுர அடி முதல் 30 ஆயிரம் சதுர அடி வரையுள்ள மற்ற  வகை கட்டிடங்களை துணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும். 30 ஆயிரம் சதுர அடி முதல் 1  ெஹக்டேர் வரையுள்ள கட்டிடங்களை இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும்.
Tags : CMDA ,building ,DTCB , clearance ,CMDA, DTCP,building,publication,government
× RELATED தமிழ்நாட்டில் 7 தொழில் நிறுவனங்களை...