கடுமையான வறட்சியால் 250 ஏக்கர் நெற்பயிர் கருகியது: நிவாரணம் வழங்காவிட்டால் தற்கொலை என விவசாயிகள் ஆவேசம்

சென்னை: திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், வறட்சி காரணமாக 250 ஏக்கரிலான நெற்பயிர்கள் முற்றிலும் கருகியது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பை விவசாயிகள் சந்ததித்துள்ளனர். தமிழகத்தில் ஒரு பக்கம் வறட்சியால் குடிக்கவும், குளிக்கவும் தண்ணீல் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அலுவலகத்துக்கு லீவ் எடுக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மற்றொரு பக்கம் தண்ணீர் இல்லாத  காரணத்தால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து செல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதில் அதிகளவு பாதிகப்பட்டது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள்.இந்நிலையில் இந்த வறட்சி விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை. திருவள்ளூர் ஒன்றியம் புன்னப்பாக்கம், ஈக்காடு, ராமந்தண்டலம், ஒதிக்காடு, தலக்காஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையும், அதை  சார்ந்த தொழிலையும் செய்து வருகின்றனர். இக்கிராமங்களில் மட்டும், 1,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.

இந்த பயிரை, வேளாண்மை துறை அதிகாரிகளின்  பரிந்துரையின்பேரில், திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் இடைவெளிவிட்டு பயிர் செய்துள்ளனர். ஆனால். கோடை மழை முற்றிலும் பொய்த்ததால், சில விவசாயிகளின் நெற்பயிர்  திடீரென கருகியது. இவ்வாறு, 250 ஏக்கருக்கும் இருக்கும் என்று விவசாயிகள் அழுதபடி கூறினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மேலும் கூறுகையில், ‘’நாங்கள் கடன் வாங்கி நெற்பயிரிட்டோம். இதுவரை, 8 ஏக்கருக்கு ₹2 லட்சம் செலவு   செய்தும், வறட்சியால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமாகி உள்ளது. பயிருக்கான இன்ஸ்சூரன்ஸ் செலுத்தியும், கடந்தாண்டு சேதமான பயிருக்கே இதுவரை அரசு நிவாரணம் வழங்கவில்லை.  பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையேல், தற்கொலை செய்துகொள்வதை தவிர  எங்களுக்கு வேறு வழியில்லை’’ என்றனர்.எனவே, புன்னப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: