1.67 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் நிவாரண நிதி: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: மீன்பிடி தடைகாலத்தில் 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1.67 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ₹5 ஆயிரம் வீதம் ₹83 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கடல் மீன்வளத்தை பேணிகாத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி ெதாடங்கி ஜூன் 14ம் தேதி வரையிலும்,  மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடிப்பு தடை செய்யப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடைகாலத்தில் 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிவாரணத்தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ₹5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் ₹5 ஆயிரம் வீதம் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு  நிவாரணத்தொகை வழங்கிட மொத்தம் ₹83.50 கோடி அரசால் ஒப்பளிக்கப்பட்டு, தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: