சாலை அமைக்கும்போது விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை: கான்டிராக்டர், நிறுவனங்களுக்கு ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை மாநகராட்சி சாலைகளுக்கு இடையே பணிகளை மேற்கொள்ளும்போது நிறுவனங்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். போக்குவரத்து  காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

Advertising
Advertising

அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பணியை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு  பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். அப்பொறுப்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை போக்குவரத்துத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் சாலையில் பணி மேற்கொள்வதற்கான அனுமதி கடிதத்தினை அலுவலர்கள்  கேட்கும் நேரங்களில் காண்பிக்க வேண்டும்.இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளை கடைபிடித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: