நியூசிலாந்தில் நில நடுக்கம்

வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்கில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள கெர்மடெக் தீவு பகுதியில் நேற்று காலை 10.55 மணியளவில் நிலநடுக்கம் எற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகளாக பதிவானது. இது கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை எனவும் நியூசிலாந்து மக்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள், உயிர்ச்சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

Related Stories:

>