குடிக்க தண்ணீர் தர முடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன்?: திருநாவுக்கரசர் கேள்வி

சென்னை: குடிக்க தண்ணீர் தரமுடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன் என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் தலைவிரித்தாடுகிறது. மாநில அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்பே திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டது. குடிக்க தண்ணீர் தர முடியாத அரசால் மக்களுக்கு என்ன பலன் ஏற்படப்போகிறது. இனிமேலாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய வேண்டும். மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத ஒரு அரசு தேவையில்லை.

Advertising
Advertising

Related Stories: