எடப்பாடி அரசு மேலும் நீடித்தால் தமிழக வளம் கொள்ளை போகும்: காங்கிரஸ் எச்சரிக்கை

சென்னை: எடப்பாடி அரசு மேலும் நீடித்தால் தமிழக வளம் கொள்ளை போகும் என்று காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை: மதுபான, குளிர்பான உற்பத்திகளை உடனடியாக நிறுத்தி அங்கு பயன்படுத்தும் குடிநீரை மக்களுக்கு வழங்கவேண்டும். எடப்பாடி அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் குடிநீர் மேலாண்மையை உள்ளாட்சி நிர்வாகமே செய்திருக்கும்.  குடிமராமத்து பணி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொள்ளை போகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மத்திய அரசின் புதிய கார்பரேட் கொள்கைப்படி பொதுவினியோகத்துறையை இழுத்து மூட மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிய தயாராகிறது. எடப்பாடி அரசு தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் உரிமை மாத்திரமல்ல, வளங்களும்  கொள்ளை போகும். மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது. தமிழக அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி எடப்பாடி அரசை மிரட்டி அதிமுகவிற்கு புதிய தலைமையை உருவாக்க முயற்சிக்கிறது.ரஜினியை எம்ஜிஆர் முகமாக அதிமுகவில் திணிக்க எல்லா முயற்சிகளையும் பாஜ எடுக்கிறது. அதன் ஒரு பகுதிதான் ரஜினி பற்றி பாட புத்தகத்தில் இடம்பெற்று இருப்பது. தண்ணீர் பஞ்சம், உணவுப்பஞ்சம், இயற்கை வளங்களை பாதிக்கும் நாசகார திட்டங்கள் என தமிழகத்தின் மீது திணித்து மக்கள் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லை. அந்த இடத்திற்கு ரஜினி தகுதியானவர் என்னும் திட்டத்தையும் எடப்பாடியை  வைத்தே மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிடுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>