ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 2 பேர் கைது

சென்னை: ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவரை ஆட்டோவில் வந்த இரண்டு பேர் ஓட ஓட அரிவாளால் வெட்டினர். கள்ளத்தொடர்பால் நடந்த  இந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் ஏஎப் பிளாக்கை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் மீது மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மயிலாப்பூர் ராயப்பேட்டை  நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம் எதிரே தினேஷ் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில்  தினேஷை வழிமறித்து  சாலையிலேயே ஓட ஓட அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் தப்பிக்க சாலையின் தடுப்பு சுவரை தாண்டி ஓட முயன்றார். ஆனாலும் 2 பேர் விடாமல் துரத்தி வெட்டி சாய்த்தனர். அப்போது , அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது  வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு ஓடினர்.

Advertising
Advertising

இதை நேரில் பார்த்த பொதுமக்களும் பயந்து ஓடினர். பின்னர் நிலைமையை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் 2 பேரும் தாங்கள் வந்த ஆட்டோவிலேயே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மயிலாப்பூர் உதவி கமிஷனர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,  மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியை  சேர்ந்த ராஜேஷ் மனைவியுடன் தினேஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், இதனால்  நாகமணி தனது நண்பர் நாகமணியுடன் சேர்ந்து வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: