திருச்செங்கோட்டில் ரூ90 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,000 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த  மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர்.

Advertising
Advertising

இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ7,129 முதல் ரூ8,555 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ6,1000 முதல் ரூ6,954 வரையும், பனங்காளி மஞ்சள் குவிண்டல் ரூ11,819 முதல் ரூ14,566 வரையும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 2,000 மூட்டை மஞ்சள் ரூ90 லட்சத்துக்கு விற்பனை ஆனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: