நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு

வெலிங்டன் : நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த தீவு பகுதிகளான கெர்ம்டெக் பகுதியை சேர்ந்த ஆக்லாந்து மற்றும் டோங்கா ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.

இதனையடுத்து அவசர கால சிவில் மேலாண்மை நிர்வாகம் கடலோர பகுதிகளில் கடுமையான அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என தொடக்கத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் கடற்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர்  உயிர்ச்சேதமும் பாதிப்பும் இல்லை என்பதால் 8 நிமிடங்களில் சுனாமி எச்சரிக்கையை நியூசிலாந்து அரசு வாபஸ் பெற்றது.

× RELATED நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு