×

உள்ளாடையை கழற்றி தந்து டீ குடிக்க சொன்ன நடிகை: சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ

மும்பை: இந்தியாவும் அண்டை நாடான பாகிஸ்தானும் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை காண இருநாட்டினரும் தீவிர ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், இந்த போட்டியை மையமாக வைத்து, சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில், புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை  விரட்டி சென்று அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கிண்டல் செய்யும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் உடையை அணிந்த அபிநந்தனை போல தோற்றம்  கொண்டவரிடம் இருந்து டீ கோப்பை பாகிஸ்தானியர்கள் பறிப்பது போன்ற காட்சி இருந்தது. அதன் மூலம், உலகக்கோப்பை எங்களுக்குதான் என அவர்கள் கூறுவதுபோல் விளம்பரத்தை உருவாக்கி இருந்தனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த விளம்பரத்துக்கு பாலிவுட் நடிகை பூனம் பாண்டே பதிலடி கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிராவை அதிரடியாக கழற்றும் அவர், ‘நீங்கள் ஏன் டீ கோப்பையை கேட்கிறீர்கள்? வேண்டுமானால், எனது பிராவை தருகிறேன். அதில், டீ அருந்துங்கள்...’ என பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் சமூக  வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணியை இந்தியா கிரிக்கெட் அணி தோற்கடித்தபோது மேலாடை அணியாத தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நடிகை பூனம் பாண்டே அதிர்ச்சி அளித்திருந்தார். அதில், இந்திய வீரர்களின் வெற்றிக்கு இந்த புகைப்படத்தை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இப்போது, அவர் ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து படைத்துள்ளார்.

Tags : Actress , Take , underwear, Tea Drinking, Viral Video , Social Network
× RELATED 2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை