×

திருப்பதி ஏழுமலையானுக்கு 2.5 கோடி மதிப்பிலான தங்க கைகள் காணிக்கை: தமிழக பக்தர் வழங்கினார்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு 2.5 கோடி மதிப்பிலான தங்க கைகளை தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, தேனியைச் சேர்ந்த தங்கதுரை என்ற பக்தர் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். தொடர்ந்து அவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர்  வேண்டுதலை நிறைவேற்றிய ஏழுமலையானுக்கு 2.5 கோடி மதிப்பில், 5.5 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட கைகளை காணிக்கையாக தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், `‘உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அப்போது உடல்நிலை சீரடைந்தால் சுவாமிக்கு காணிக்கை அளிப்பதாக வேண்டிக்கொண்டேன். அதன்படி  தற்போது ஏழுமலையானுக்கு 2 கைகளை தங்கத்தால் செய்து காணிக்கையாக வழங்கினேன். தற்போது தயார் செய்யப்பட்ட இந்த கைகளுக்காக 7 மாதங்களுக்கு முன்பு தேவஸ்தான அதிகாரிகளிடம் மூலவர் சன்னதியில் உள்ள சுவாமியின்  கைகள் அளவு பெறப்பட்டு தயார் செய்யப்பட்டது’’ என்றார்.

Tags : Tirupathi Elephantanai ,devotees ,Tamil , 2.5 crores ,gold hands, Tirupati Ezumalayaman
× RELATED 25 நிமிடங்களில் 247 படிக்கட்டுகளை...