உலகிலேயே மிகவும் அதிகபட்சமாக குவைத்தை வாட்டிய 145.4 டிகிரி வெயில்: அடுத்த மாதம் 154 டிகிரி எட்டும்

துபாய்: உலகிலேயே மிகவும் அதிகப்பட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.. பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகபட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவானது. ஆனால், பதிவான வெயிலைக் காட்டிலும்  உணரப்பட்ட வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் சாலைகளில் தார் உருகியநிலையில் காணப்பட்டது. மக்கள், வீடுகளில் முடங்கினர். போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. நிழலான இடங்களில் கூட கடுமையான வெப்பநிலை உணரப்பட்டது. சவுதி அரேபியாவில், அல் மஜ்மா என்ற இடத்தில் 131 டிகிரி வெப்பம் நிலவியது.

Advertising
Advertising

குவைத், சவுதியில் வரும் 21ம் தேதிதான் கோடைக்காலம் தொடங்குகிறது.  அங்கு, கோடை முழுவதும் இதே வெப்பநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்சிலும் வெயில் கடுமையாக உள்ளது.  எமிரேட்சில் பல இடங்களில் 118.4 டிகிரியும், ஈராக்கின் மேசன் பகுதியில் 132 டிகிரியும் வெப்பம் நிலவியது. இந்தாண்டு கோடைக்காலத்தில் வெயில் மிக கடுமையாக இருக்கும் என குவைத் வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். அடுத்த மாதம் வெயிலின் அளவு 154.4 டிகிரியை எட்டக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: