ஏடிஎம் மிஷின்களுக்கு சூப்பர் பாதுகாப்பு

மும்பை: எல்லா ஏடிஎம் மிஷின்களையும் நகர விடாமல் ‘ஆணி’ அடித்து வைக்கவும். என்ன சிரிக்கிறீர்களா? உண்மையில் ஒரு வகையில் அப்படித்தான் வைக்கச்ெசால்கிறது ரிசர்வ் வங்கி. ஏடிஎம் மிஷின்களை பெயர்த்தும், உடைத்தும் பணத்தை திருடுவதை  தடுப்பது உட்பட பல பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி பரிசீலித்தது. உயர் கமிட்டி சிபாரிசின் படி, சில பாதுகாப்பு நடவடிக்கைகளை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அவற்றில் சில:

* ஏடிஎம் மிஷின்களை சுவற்றுடன் பதித்து வைக்க வேண்டும். அல்லது தூண்களில் பதித்து, பெயர்க்க முடியாமல் செய்ய வேண்டும். மேலும் தரையில் ஆணிகளை அடித்து பெயர்க்க விடாமல் செய்யலாம்.
*  ஏடிஎம் மிஷின்களில் பணம் நிரப்ப டிஜிட்டல் லாக்கர் முறை உள்ளது. அதில் ஒரு முறை மட்டும் ‘காம்பினேஷன் லாக்கர்’ முறையில் திறந்து பணத்தை  நிரப்ப வேண்டும்.
* கண்காணிப்பு அம்சங்கள் முழுமையாக உள்ளதா என்று நூறு சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.
* மத்திய பாதுகாப்பு படை  உள்ள விமான நிலையம் போன்ற பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் உள்ளவை தவிர, மற்ற பொது இடங்களில் உள்ள ஏடிஎம்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும்.
* பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் ஏடிஎம் மிஷின்களில் திருட்டு நடக்க விடும் வங்கிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.Tags : ATM machines, Super ,security
× RELATED பாபர் மசூதி இடிப்பு தினம் அயோத்தியில் பாதுகாப்பு