மும்பை: ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு என்பது போய் இப்போது மொபைல் ஸ்கிரீனுக்கும் வந்து விட்டது. இளைய தலைமுறையினரை ஈர்க்க இந்த காப்பீட்டை அறிமுகப்படுத்தி உள்ளது டிஜிட் காப்பீட்டு நிறுவனம். இதுகுறித்து இதன் தலைவர் கமலேஷ் கோயல் கூறியதாவது: பல வகையில் காப்பீடுகள் உள்ளன. இளைஞர்களை ஈர்க்க வேண்டும்; அதுவும் குறைவான பிரீமியத்துடன் கூடியதான காப்பீட்டை அறிமுகப்படுத்த நினைத்தோம். நாங்கள் இந்த காப்பீட்டை முழுமையாக ஆன்லைன் மூலம் செயல்படுத்துகிறோம். காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதில் இருந்து அதற்கு தேவையான எல்லாவற்றையும் ஆன்லைனில் முடித்து விடுகிறோம்.கடைசியில் காப்பீட்டு தொகையையும் அவர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கிறோம்.