×

மொபைல் ஸ்கிரீனுக்கு வந்துவிட்டது காப்பீடு

மும்பை: ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு என்பது போய் இப்போது மொபைல் ஸ்கிரீனுக்கும் வந்து விட்டது. இளைய தலைமுறையினரை ஈர்க்க இந்த காப்பீட்டை அறிமுகப்படுத்தி உள்ளது டிஜிட் காப்பீட்டு நிறுவனம். இதுகுறித்து இதன் தலைவர் கமலேஷ் கோயல் கூறியதாவது: பல வகையில் காப்பீடுகள் உள்ளன. இளைஞர்களை ஈர்க்க வேண்டும்;  அதுவும் குறைவான பிரீமியத்துடன் கூடியதான காப்பீட்டை அறிமுகப்படுத்த நினைத்தோம். நாங்கள் இந்த காப்பீட்டை முழுமையாக ஆன்லைன் மூலம் செயல்படுத்துகிறோம். காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதில் இருந்து அதற்கு தேவையான  எல்லாவற்றையும் ஆன்லைனில்  முடித்து விடுகிறோம்.கடைசியில் காப்பீட்டு தொகையையும் அவர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கிறோம்.

மொபைல் போன் ஸ்கிரீன் உடைந்து விட்டால், அதன் தன்மையை அறிய சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்கிறோம். அதற்காக நாங்கள் தனி சாப்ட்வேர் பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர் எங்கிருந்தாலும் அவரின் மொபைல் போன்  எப்படியிருக்கிறது என்பதை ரிமோட் முறை மூலம் ஆய்வு செய்து அதற்கான தொகையை நிர்ணயிக்கிறோம். மொபைல் போன் மாடல், ஐஎம்இஐ எண் போன்றவை நிமிடத்தில் கண்டறிய சாப்ட்வேர் உதவுகிறது. மொபைல் போனுக்கு பாதுகாப்பு தரும் வகையில் காப்பீட்டை ஆன்லைனில் அளிக்கிறோம்.   காப்பீட்டு கட்டணம் 1700 ரூபாய் தான். அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை மொபைல் ஸ்கிரீனை மாற்றி கொள்ளலாம். இவ்வாறு கோயல் கூறினார்.


Tags : mobile, screen, Insurance ,arrived
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...