நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் நாக்-அவுட் சுற்றில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. டி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி தனது 2வது லீக்  ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியுடன் மோதியது. கடும் போராட்டமாக அமைந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணியின் ஜூடி டெய்லர் 62வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.  தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து நாக்-அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. இங்கிலாந்து - அர்ஜென்டினா மோதிய லீக் ஆட்டத்தில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

Advertising
Advertising

Related Stories: