துளித்துளியாய்.....

* இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், பிளாக்கில் வாங்க ரசிகர்கள் அலைமோதுகின்றனர். பிரிமியம் பாக்ஸ் இருக்கைக்கு ₹4.4 லட்சம் வரையும், அதற்கடுத்த  ஸ்பெஷல் கேலரிக்கு ₹2.2 லட்சம் வரை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரண வகுப்பு டிக்கெட்டுக்கும் மூன்று மடங்கு விலை சொல்கிறார்களாம்.
*  இந்த போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் பெட் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெட்டிங்குக்கு அனுமதி இல்லை என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
* மழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் மோதல் கைவிடப்பட்டால் மீடியா விளம்பர வருவாயில் ₹150 கோடி வரை இழப்பு நேரிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
* ‘இந்திய அணி சிறப்பான நிலையில் உள்ளது. முழு திறமையையும் வெளிப்படுத்தி ஒருங்கிணைந்து விளையாடினால் எந்த அணியையும் வீழ்த்துவோம்’ என்று கேப்டன் விராத் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* உலக கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா (6-0), நேருக்கு நேர் மோதியுள்ள 131 ஒருநாள் போட்டிகளில் 73 தோல்விகள் கண்டு பின்தங்கியுள்ளது. இந்திய அணி 54 போட்டியில் வென்றுள்ள  நிலையில், 4 ஆட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
× RELATED ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியத்தால்...