×

எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் ஹாக்கி இந்தியா சாம்பியன்

புவனேஸ்வர்: எப்ஐஎச் சீரீஸ் ஹாக்கி தொடரின் பைனலில் தென் ஆப்ரிக்காவை 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து நேரடியாக  அரை இறுதிக்கு முன்னேறியது. பி பிரிவில் அமெரிக்க அணி (7) முதலிடம் பிடித்தது. கிராஸ் ஓவர் போட்டிகளில் வென்று ஜப்பான், தென் ஆப்ரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

அரை இறுதியில் ஜப்பான் அணியை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்த நிலையில்,  சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் நேற்று மோதின.தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய வீரர்கள் வருண் (2வது, 49வது நிமிடம்), ஹர்மான்பிரீத் (11வது, 25வது நிமிடம்), விவேக் (35’)  ஆகியோர் கோல் அடித்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பாட்ஸ் (53’) ஆறுதல் கோல் போட்டார்.Tags : FIH Series Pains Hockey India , FIH,Finals Hockey, champion
× RELATED மரடோனா நினைவு கால்பந்து போட்டி தோடர் பழங்குடியின அணி சாம்பியன்