×

புதிய மைல்கல்லை எட்டிப்பிடித்த ரெனால்ட் கிவிட்

ரெனால்ட் கிவிட் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இடைப்பட்ட ஆண்டுகளில் ஒரு சில சிறிய அளவிலான அப்டேட்களை மட்டுமே ரெனால்ட் க்விட்  பெற்றுள்ளது. ஆனாலும், மிக சவாலான விலை, பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளதால் ரெனால்ட் கிவிட் 3 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளது. ரெனால்ட் கிவிட் காரில், ஆப்பிள் கார் பிளே மற்றும்  ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன்கூடிய 7.0 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டில் இந்த வசதி கிடைக்கும் மலிவான விலை கார்களில் ரெனால்ட் கிவிட்டும் ஒன்று.இதுதவிர, ஏபிஎஸ் வசதி அனைத்து புதிய கார்களிலும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், எஞ்சிய பாதுகாப்பு வசதிகள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கார்களிலும் வரும் ஜூலை 1ம் தேதி  முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

தற்போது, கிவிட் காரின் பேஸ்லிப்ட் வெர்ஷனை களமிறக்கும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது, நடப்பாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதவிர, டிரைபர் என்ற புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி கார் ஒன்றையும் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மிகவும் மலிவான விலையில் இந்த கார் எதிர்பார்க்கப்படுவதால், ரெனால்ட் டிரைபர் கார் இந்திய  வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெனால்ட் டிரைபர் கார் வரும் ஜூன் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. அத்துடன், டஸ்டர் காரின் பேஸ்லிப்ட் வெர்ஷனையும் ரெனால்ட் நிறுவனம் களமிறக்க  உள்ளது. இதில், டஸ்டர் காரின் முன்பக்க டிசைன் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. இவை தவிர, வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின்களும் வழங்கப்பட உள்ளன. ரெனால்ட் காட்டில்  ஒரே மழைதான்.



Tags : Renault ,Givitt , Milestone, Reach, Renault Kivit
× RELATED ரெனால்ட் லிமிடெட் எடிஷன் கார்கள்