மணலை திருடு... மாமூலை வெட்டு

தேனி அருகே உப்புக்கோட்டை, குண்டல்நாயக்கன்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் முல்லை பெரியாற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. இரவு முழுவதும் டிராக்டர்களை வைத்து மணல் அள்ளி  வருகின்றனர். இங்கு புகழ் பெற்ற அம்மன் கோயில் உள்ள ஊர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்ஐ ஒருவர், மணல் கொள்ளையை ஊக்கப்படுத்தி வருகிறாராம். இதற்கு கை மாறாக மணல் அள்ளுபவர்கள், எஸ்ஐயை சிறப்பாக  ‘கவனிக்கிறார்களாம்’.

இவ்வளவு பகிரங்கமாக ஆதரவு அளிக்க வேண்டாமே’ என சக போலீசார் அறிவுறுத்தினால் அந்த எஸ்ஐ, ‘‘எனக்கு ஆளுங்கட்சியில் தலைமைச்செயலகம் வரை செல்வாக்கு உள்ளது. யாராலும் என்னை எதுவும் செய்ய முடியாது’’ என்கிறாராம்.  இந்த விஷயம் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கவனத்திற்கு சென்றதாம். அதிர்ந்து போன எஸ்பியோ, இவரை இடம் மாறுதல் செய்ய முடிவு செய்திருக்கிறாராம். ஆனால் ‘‘என்னை மாற்றவே முடியாது’’ என எஸ்ஐ, சக போலீசாரிடம் கூறி  வருகிறாராம். யாருக்கு வெற்றி கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் மற்ற அதிகாரிகள் காத்திருக்கின்றனராம்.Tags : Steal ,Cut ,mammoth
× RELATED விழுப்புரத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தை - 2 காவலர்கள் மாற்றம்