×

ஒய்எஸ்சிஏ டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ்

சென்னை: ஒய்எஸ்சிஏ டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியா சிமென்ட்ஸ் அணி முன்னேறியது.யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் சங்கம் நடத்தும்  ‘50வது ஒய்எஸ்சிஏ டிராபி’க்கான கிரிக்கெட் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 54 அணிகள் பங்கேற்றன. ேம 1ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. முதல்  அரையிறுதிப் போட்டியில் விவேகானந்தா கல்லூரி(சென்னை)-இந்தியா சிமென்ட்ஸ் அணிகள் மோதின. அதில் முதலில் விளையாடிய விவேகானந்தா கல்லூரி 25.1 ஓவர்களில் எல்லா  விக்கெட்களையும் இழந்து 96 ரன்கள்  எடுத்தது.  

அந்த அணியின் மோகித் அரிகரன் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இந்தியா சிமென்ட்சின் ஆகாஷ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.தொடர்ந்து விளையாடிய இந்திய சிமென்ட்ஸ் 29.2 ஓரவர்களில்  8 விக்கெட்கள் இழந்து 98 ரன்கள் எடுத்தது. அதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்தியா சிமென்ட்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியின் அபிஷேக் தன்வர் 37 ரன்கள் விளாசினார்.அதேபோல் இன்னொரு  அரையிறுதிப் போட்டியில்  பரோடா வங்கி(பெங்களூர்)-ஆத்ரேயா(திருச்சூர்)  அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ் அணியுடன் மோதும். இறுதிப் போட்டி  சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

Tags : India Cements ,YCCA Trophy Final , YSCA Trophy, India Cements ,final
× RELATED அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை...