கலப்பு இரட்டையர் டென்னிஸ் எம்சிசி சாம்பியன்

சென்னை: யுசிஏஎல்-டிஎன்டிஏ கலப்பு இரட்டையர்  டென்னிஸ் போட்டியில் எம்சிசி கிளப் அணியின் சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ்  இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு  டென்னிஸ் சங்கமும், யுசிஏஎல்  நிறுவனமும் இணைந்து  கலப்பு இரட்டையர் போட்டியை நடத்தியது. இதில் சென்னையில் உளள கிளப்கள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான  மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்(எம்சிசி)  சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ்  இணையுடன், நுங்கம்பாக்கம் டென்னிஸ் கிளப்(என்டிசி) சாய் அவந்திகா/மதன்குமார் இணை மோதியது. முதல் செட்டை எம்சிசி அணியும், 2வது செட்டை என்டிசி அணியும் கைப்பறறின. பின்னர் பரபரப்பாக  நடைபெற்ற 3வது செட்டை எம்சிசி அணி போராடி வென்றது.

அதனால் எம்சிசி அணி 6-1, 3-6, 7-5 என்ற செட்களில் வென்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. வெற்றிப் பெற்ற சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ் ஆகியோருக்கு 10 ஆயிரம்  ரூபாயும், 2ம் இடம் பெற்ற  சாய்  அவந்திகா/மதன்குமார் ஆகியோருக்கு 5 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஆசிய சாம்பியன் லட்சுமி மகாதேவன் வெற்றிப் பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும்  காசோலைகளைவழங்கினார்.

Related Stories: