×

தமிழகத்தில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை 14.3% குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் எண்ணிக்கை 14.3 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 5.85 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள், 5.52 லட்சத்திற்கும் அதிகமான பஸ்கள், 2.15 கோடிக்கும் மேலான இருசக்கர வாகனங்கள், 24.7 லட்சத்திற்கு கூடுதலான கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் அனைத்து  சாலைகளிலும் வாகனங்கள் அதிகளவில் பயணிக்கின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல்  பயணிப்பது, குடிபோதை, மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்வதால் விபத்து நடக்கிறது.விபத்தில் சிக்குவோரின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இதைத்தடுக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களை விற்பனை ெசய்யும்  நிறுவனங்களிடத்தில் ெஹல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சாலைவிதிகள் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படுகிறது.இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 9.52 சதவீதம் அளவிற்கும், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளில் எண்ணிக்கை 14.3 சதவீதம் அளவிற்கும் சரிந்துள்ளது. அதன்படி கடந்த  2017-18ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான ஓராண்டில் மொத்தமாக 21,906 விபத்து நடந்திருந்தது.

இதில், 4,299 பேர் இறந்தனர். 2018-19ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 19,820 ஆக விபத்து குறைந்துள்ளது. இதில், 3,696 ேபர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக  குறைந்திருந்தாலும், மேலும் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதுகுறித்து போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில் விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து  எடுத்துக்கூறப்படுகிறது. இதனால் சாலைவிபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

20.54 லட்சம் பேர் மீது வழக்கு
தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வரை ஹெல்மெட் அணியாத 15,44,868; வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசியதாக 1,37,438; சீட் பெல்ட் அணியாமல் கார் இயக்கிய, 3,72,167 பேர் என மொத்தமாக 20,54,473 பேர் வழக்கு பதியப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஆங்காங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னைக்கு முதலிடம்
கடந்த 2018ம் ஆண்டில் சென்னையில் 2,597 விபத்துக்கள் நடந்தது. இதில் 432 ேபர் இறந்தனர். இவ்வாண்டு ஏப்ரல் வரையில் 2,576 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 455 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் காஞ்சிபுரம், சேலம்,  கோவை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.



Tags : Tamil Nadu , Crashes , Tamil Nadu,declined, 14.3%
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...