முதியவர் கொலையில் பெண்கள் உள்பட மூவர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரை எம்.எம்.காலனியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (72). அம்மா உணவக காவலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அமுதா (63) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அப்போது அமுதா அவரது மகள்கள் ஆர்த்தி, நாகமணி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சோலைமுத்து ஆகியோர் பாண்டுரங்கனை சரமாரி தாக்கினர்.படுகாயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டுரங்கனை அடித்துக்கொலை செய்ததாக ஆர்த்தி, நாகமணி மற்றும் சோலைமுத்து ஆகியோரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>